ஜெயிலில் இருந்து வந்ததுமே வேலையை காட்ட ஆரம்பித்த பிரபல ரவுடி.. தடுக்கி விழுந்து கை, கால் முறிவு.!

By vinoth kumarFirst Published Mar 8, 2022, 11:31 AM IST
Highlights

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் சங்கர் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 4 பேர் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அதே பகுதியில் சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர். 

பல்லாவரம் அருகே பிரபல ரவுடி சிறையில் இருந்து வெளியே வந்து 5 நாட்களில் கத்தியை காட்டி லாரியை கடத்த முயன்ற போது போலீசாரை பார்த்தும் தப்பமுயன்ற ரவுடிகள் தவறி விழுந்து கை கால் முறிவு ஏற்பட்டது. 
 
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் சங்கர் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 4 பேர் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அதே பகுதியில் சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது ஓட்டுநர் பணம் இல்லை என்றதும் லாரியை இங்கேயே விட்டுட்டு ஓடிவிடு இல்லையென்றால் கொலை செய்து விடும் என மிரட்டியுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் பொழிச்சலூர் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

Latest Videos

லாரியை மடக்கி வழிப்பறி

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வழிப்பறியில் ஈடுபட்ட  நபர்களை பிடிக்க முயன்றபோது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர். ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவர்களை போலீசார் விரட்டி பிடித்த போது சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

கை, கால் முறிவு

பின்னர் அவனை சங்கர்நகர் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் பாணியில் விசாரித்த போது பம்மல் திருவள்ளூவர் தெருவை சேர்ந்த சத்யா(எ) பம்மல் சத்யா (23) என்பதும் இவன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மூன்று கொலை வழக்கு உட்பட, கொலை முயற்சி, திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. மேலும், குன்றத்தூரில் நடந்த கொலையில் சிறைக்கு சென்று கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரிய வந்தது. மற்ற 3 பேரும் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகை எடுத்து தங்கியிருப்பதாக விசாரணையில் தெரிவித்தான். 

சிறையில் அடைப்பு

உடனே கூடுவாஞ்சேரி உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சென்ற போலீசார், அங்கு தங்கியிருந்த நபர்களை பிடிக்க முற்பட்ட போது இரண்டாம் மாடியில் இருந்து குதித்து தப்பிக்கும் போது ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு இருவரையும் கை செய்தனர். பின்னர்,  தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

click me!