
திருவண்ணாமலை அருகே மூதாட்டியை கட்டியால் தாக்கி கொடூரமாக கொலை செய்த வழக்கில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைக்காக கொலை
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா (70). இவரது கணவர் பொன்னுசாமி உயிரிழந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். மகனுக்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஓடை பகுதியில் விறகு வெட்ட சென்ற சுசிலா கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அப்பகுதியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுசிலா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:- நடுவானில் பறந்த விமானம்.. தூக்கத்தில் அந்த இடத்தில் கை வைத்த இளைஞர்.. அதிர்ந்து எழுந்த பெண் செய்த காரியம்.!
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுசீலா காதில் அணிந்திருந்த தங்க கம்மல் காணாமல் போனதும் தெரியவந்தது. இதனையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்தியதில் அதே பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
சிறுவர் கைது
இதனையடுத்து, போலீசார் கூறுகையில்;- மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்மல் திருட திட்டம் தீட்டி ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்து மூதாட்டியை கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு மூதாட்டி காதில் அணிந்திருந்த ½ பவுன் கம்மலை திருடிச் சென்றது தெரியவந்தது. இதில் ஒரு சிறுவன் பிளஸ்-2, மற்றொரு சிறுவன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறன்றனர். மேலும் ஒரு சிறுவன் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். போலீசார் 3 சிறுவர்களையும் கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். நகைக்காக மூதாட்யை சிறுவர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.