நெல்லை நாங்குநேரி சாமிதுரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராக்கே ட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நாங்குநேரி காவல் நிலையத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த இளைஞர் சாமிதுரை(26), ஜூலை மாதம் 29ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவனந்தபுரத்தில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க..2 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த விவகாரம்.. போலீசாருக்கு ஷாக் கொடுத்த திக் திக் நிமிடங்கள் !
அதாவது ராக்கெட் ராஜா தரப்புக்கும், சாமிதுரை தரப்புக்கும் இடையே ஜாதி ரீதியாக பல ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே நடைபெற்ற ஒரு கொலையில் பழிக்குப் பழியாக சாமிதுரை கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ராக்கெட் ராஜாவை பல நாட்களாக காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
திருப்பு முனையாக திருவனந்தபுரத்தில் கடந்த 7ஆம் தேதி அவரை நாங்குநேரி டிஎஸ்பி சதுர்வேதி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட ராக்கெட் ராஜா நாங்குநேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி ராக்கெட் ராஜாவை வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க..Alien : டிசம்பர் 8.! பெரிய விண்கல்லில் ஏலியன்கள் பூமிக்கு வரும்.. கணித்து சொன்ன டைம் ட்ராவலர் - சாத்தியமா ?
இதையடுத்து, பாளையங்கோட்டை சிறையில் ஏற்கனவே ஜாதி ரீதியான மோதல் அரங்கேறி வருவதால், ராக்கெட் ராஜாவை சிக்கல்களை தவிர்ப்பதற்காக கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சாமித்துரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா மீது காவல்துறையினர் குண்டர் சட்டம் பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக