'கலெக்டர்ல இருந்து எல்லாரையும் அவங்க கவனிக்கிறாங்க.. விட்டுரு'..! மணல் கடத்தலுக்கு ஆதரவாக வி.ஏ.ஓ வை மிரட்டிய வருவாய் அதிகாரி..!

By Manikandan S R S  |  First Published Jan 28, 2020, 12:35 PM IST

மாவட்ட ஆட்சியர், தாசில்தார் என அனைத்து தரப்பினரையும் மணல் கடத்தல்காரர்கள் கவனித்து வருவதாகவும் ஆகவே அவர்களை விட்டுவிடுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அதை கார்த்திக் மறுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த ஈஸ்வரி, கிராம நிர்வாக அலுவலருக்கு மணல் கடத்தல் லாரியை பிடிக்கும் அதிகாரமில்லை என்று மிரட்டியுள்ளார்.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கிறது காட்டூர். இங்கு கிராம நிர்வாக அலுவலகராக கார்த்திக் என்பவர் இருந்த வருகிறார். கடந்த 3 தினங்களுக்கு முன் கிராம பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் வரவே கார்த்திக் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மணல் லாரி ஒன்றை மடக்கி பிடித்தார். அனுமதி இன்றி மணல் கடத்தி வந்ததாக லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது குற்றசாட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்தநிலையில் கார்த்திக்கை பொங்கலூர் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, மாவட்ட ஆட்சியர், தாசில்தார் என அனைத்து தரப்பினரையும் மணல் கடத்தல்காரர்கள் கவனித்து வருவதாகவும் ஆகவே அவர்களை விட்டுவிடுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அதை கார்த்திக் மறுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த ஈஸ்வரி, கிராம நிர்வாக அலுவலருக்கு மணல் கடத்தல் லாரியை பிடிக்கும் அதிகாரமில்லை என்று மிரட்டியுள்ளார்.

மணல் திருட்டுக்கு ஆதரவாக பேசிய பெண் ஆர்.ஐ.. வைரலாகும் மிரட்டல் ஆடியோ..! வீடியோ

உடனே கார்த்திக், அப்படியெனில் 'வருவாய் அதிகாரியான நீங்கள் மணல் கடத்தல் லாரியை பிடியுங்கள்' என  கூறியிருக்கிறார். அதற்கு மீண்டும் ஆட்சியர் முதல் அனைவரையும் மணல் கடத்தல்காரர்கள் கவனிப்பதாகவும் இதுகுறித்து தாசில்தார் பேசுவார் என கூறி தொடர்பை துண்டித்துள்ளார். மிரட்டும் தொனியில் பேசிய வருவாய் ஆய்வாளரின் உரையாடல் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேர்மையாக செயல்படும் அரசு அதிகாரியை, உயரதிகாரி ஒருவர் மிரட்டும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: 15 வயது சிறுமியிடம் எல்லைமீறிய கொடூரர்கள்..! ஆபாச படம் எடுத்து அட்டகாசம்..!

click me!