15 வயது சிறுமியிடம் எல்லைமீறிய கொடூரர்கள்..! ஆபாச படம் எடுத்து அட்டகாசம்..!

By Manikandan S R S  |  First Published Jan 28, 2020, 11:52 AM IST

நாகை அருகே 10ம் வகுப்பு மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இருக்கிறது கூறைநாடு. இந்த ஊரைச் சேர்ந்தவர் சந்தோஷ்(25). இவர் வசிக்கும் அதே பகுதியில் ராஜீ(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் சிறுமி 10ம் வகுப்பு படிக்கிறார். சிறுமியுடன் சந்தோஷ் அடிக்கடி பேசி வந்துள்ளார். நெருங்கி பழகிய சந்தோஷ் சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் வீட்டிற்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்தநிலையில் சிறுமியின் தந்தை மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் சென்றிருக்கிறார். அதை தெரிந்து சிறுமியின் வீட்டிற்கு சென்ற சந்தோஷ், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் மாணவிக்கு தெரியாமல் அதை காணொளியாகவும் பதிவு செய்துள்ளார். பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவை வைத்து சிறுமியை சந்தோஷ் மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனிடையே காணொளியை தனது நண்பரான கண்ணன்(36) என்பருக்கும் அனுப்பியிருக்கிறார்.

அதைப்பார்த்து கண்ணனும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் சிறுமியின் பெற்றோர் அங்கு வரவே அவர் தப்பி ஓடிவிட்டார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக சைல்டு ஹெல்ப் லைனிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சிறுமியிடம் அத்துமீறி செயல்பட்ட கண்ணன் மற்றும் சந்தோஷ் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: 11 வயது மகளை காமப்பசிக்கு இரையாக்க துடித்த தந்தை..! அதிர்ந்துபோன தாய்..!

click me!