தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஆர்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் கடந்த சில மாதங்களாக இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
ஐதராபாத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை நடுரோட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஆர்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் கடந்த சில மாதங்களாக இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரது காதலை அந்த பெண் ஏற்காமல் மறுப்பு தெரிவித்த போதும் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க;- 56 வயசுல இதெல்லாம் தேவையா.. 24 பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் சீண்டல்.. வக்கிரம் பிடித்த காமக்கொடூர ஆசிரியர்.!
இந்நிலையில், நேற்று மாலை அந்த இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது வழிமறித்த சுரேஷ் மீண்டும் தொல்லை கொடுத்துள்ளார். அப்போதும், காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதையும் படிங்க;- என்ன நடிப்புடா சாமி.. உல்லாசத்துக்காக புருஷனையே போட்டு தள்ளிய கொடூர மனைவி! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
உடனே இதனை கண்ட அப்பகுதி மக்கள் சுரேஷை தடுத்து நிறுத்தி தர்ம அடிகொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.