கணவன் கண்ணெதிரே மனைவி கதற கதற பலாத்காரம்... முன்னாள் கணவனின் அண்ணன் வெறிச்செயல்...!

Web Team   | Asianet News
Published : Mar 17, 2021, 04:41 PM IST
கணவன் கண்ணெதிரே மனைவி கதற கதற பலாத்காரம்... முன்னாள் கணவனின் அண்ணன் வெறிச்செயல்...!

சுருக்கம்

கணவனின் கண் எதிரிலேயே முன்னாள் கணவனின் சகோதரர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பெண்ணை முன்னாள் கணவனின் அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 20 வயது முதலே தன்னுடைய முதல் கணவரை பிரிந்து வாழ்த்து வருகிறார். குழந்தை இல்லாத காரணத்தால் முதல் கணவரை பிரிந்த அந்த பெண், அவர்களுடைய நாட பிராதா மரபின் படி திருமண சடங்கு இல்லாமலேயே இன்னொருவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். 

சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய இரண்டாவது கணவன் மற்றும் குழந்தை, தனது தங்கையுடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது இவருடைய மாஜி கணவனின் சகோதரன் மற்றும் 4 பேர் சஜாவர் என்ற கிராமத்தில் இவர்களை வழிமறித்துள்ளனர்.  இவர்களை மிரட்டி அருகில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்ற, அந்த கும்பல் பெண்ணின் கணவனின் கை கால்களை கயிற்றினால் கட்டிப் போட்டுள்ளது. 

அதன் பின்னர் கணவனின் கண் எதிரிலேயே முன்னாள் கணவனின் சகோதரர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. மெல்ல வயல் வெளியில் இருந்து வெளியே வந்த அந்த குடும்பம் அப்பகுதி மக்களின் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளனர். 5 பேர் கொண்ட கும்பல் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. முன்னாள் கணவனின் சகோதரன் மற்றும் இருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி