புஷ்பா பாணியில் செம்மரக்கட்டைகள் கடத்தல்.. செம சேஸிங்.. திமுக ஒன்றியக்குழு தலைவரின் கணவர் அதிரடி கைது.!

Published : Jun 02, 2022, 09:34 AM ISTUpdated : Jun 02, 2022, 09:41 AM IST
புஷ்பா பாணியில் செம்மரக்கட்டைகள் கடத்தல்.. செம சேஸிங்.. திமுக ஒன்றியக்குழு தலைவரின் கணவர் அதிரடி கைது.!

சுருக்கம்

ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து தமிழகத்துக்கு 4 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருப்பதி - வேலூர் நெடுஞ்சாலையில் ஆந்திர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான திமுக ஒன்றியக்குழு பெருந்தலைவரின் கணவரை போலீசார் அதிரடியாக கைது  செய்துள்ளனர். 

ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து தமிழகத்துக்கு 4 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருப்பதி - வேலூர் நெடுஞ்சாலையில் ஆந்திர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூர் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஒரு மினி லாரி மற்றும் 3 கார்கள் நிற்காமல் சென்றன. 

அவற்றை சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்தனர். இதில், 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய போளூரை சேர்ந்த பெருமாள் மற்றும் ஆரணியை சேர்ந்த வேலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களில் இருந்த சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

மேலும், செம்மரக்கட்டைகளுடன் 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பெருமாளின் மனைவி திமுக ஒன்றியக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பித்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்குள் மதத் தீண்டாமை..! ஷியா மசூதிகள் குறிவைக்கப்படுவது ஏன்?
விசிக கொடியை நட்டுட்டோம்.. இந்த இடம் எங்களுக்குத்தான்.. சிறுத்தைகள் அட்டூழியம்..!