கணவர் கண் முன்னே மனைவி பாலியல் வன்கொடுமை: கடனை திருப்பி செலுத்தாததால் கொடூரம்!

Published : Jul 27, 2023, 03:59 PM IST
கணவர் கண் முன்னே மனைவி பாலியல் வன்கொடுமை: கடனை திருப்பி செலுத்தாததால் கொடூரம்!

சுருக்கம்

கணவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவர் கண் முன்னே அவரது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிகர சம்பவம் புனேவில் நிகழ்ந்துள்ளது

புனேவை சேர்ந்த நபர் ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய கணவரின் கண் முன்னே அவரது 34 வயதான மனைவியை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை படம் பிடித்து அந்த வீடியோவை சமூக வலைதளங்கள் வெளியிட்ட அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புனேவை சேர்ந்த இம்தியாஸ் ஷேக் (47) என்பவர், தனக்கு தெரிந்த ஒருவருக்கு வட்டியில்லாமல் ரூ.40,000 கடன் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதனை வாங்கிய நபரால் குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த தம்பதியை அவதூறாக பேசி, மிரட்டியும் வந்துள்ளார் இம்தியாஸ் ஷேக்.

இதனிடையே, ஹதாப்சர் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட பகுதி ஒன்றுக்கு, கடன் தொடர்பாக பேச கடந்த பிப்ரவரி மாதம் அந்த தம்பதியை அவர் அழைத்துள்ளார். அப்போது வாங்கி கடனை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், ஏழ்மையின் காரணமாக பணம் இல்லாமல் தவித்த தம்பதியால் அவரது கடனை திருப்பி செலுத்த இயலவில்லை.

ஆசைவார்த்தை கூறி நினைக்கும் போதெல்லாம் இளம்பெண்ணுடன் உல்லாசம்! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர

அதன் தொடர்சியாக, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணவரை கொன்று விடுவதாக கூறி, அவர் கண் முன்னே அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வீடியோவாகவும் அவர் எடுத்து வைத்துள்ளார். அவ்வப்போது இந்த வீடியோவை காட்டி பாதிக்கப்பட்ட அப்பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் அவருக்கு இணங்க மறுக்கவே, அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த தம்பதி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இம்தியாஸை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி