2 ஆண்களின் பிறப்பு உறுப்பை அறுத்த சைக்கோ கொலைக்காரன் கைது..!

Published : Jun 12, 2019, 10:38 AM IST
2 ஆண்களின் பிறப்பு உறுப்பை அறுத்த சைக்கோ கொலைக்காரன் கைது..!

சுருக்கம்

சென்னையில் மதுபோதையில் சாலையோரம் கிடந்த 2 பேரின் பிறப்பு உறுப்பை அறுத்த சைக்கோ கொலையாளி முனுசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னையில் மதுபோதையில் சாலையோரம் கிடந்த 2 பேரின் பிறப்பு உறுப்பை அறுத்த சைக்கோ கொலையாளி முனுசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடந்த மாதம் 26-ம் தேதி ரெட்டேரி பாலத்தின் அடியில் இரவில் குடிபோதையில் தூங்கி கொண்டிருந்த அசதுல்லா என்பவரின் பிறப்பு உறுப்பை ஒருவர் அறுத்ததால் சிகிச்சை பலனினின்றி உயிரிழந்தார். இதேபோன்று கடந்த 2-ம் தேதி குடிபோதையில் தூங்கி கொண்டிருந்த நாராயணசாமி பிறப்பு உறுப்பையும் அந்த நபர் அறுத்துள்ளார். இதனையடுத்து நாராயணசாமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம உறுப்பை அறுத்த நபர் நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது. லுங்கி அணிந்தபடி நடமாடும் அந்த நபர் குறித்து தகவல் தெரிவிந்தால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது மாதவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

 

இந்நிலையில் மதுபோதையில் சாலையோரம் மயங்கி கிடந்த இருவரின் பிறப்பு உறுப்பை அறுத்த சைக்கோ கொலையாளி முனுசாமியை மானாமதுரை ரயில்நிலையம் அருகே வைத்து போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்