மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சார தொழில்... 21 வயது இளம் பெண்கள் மீட்பு..!

Published : Aug 07, 2021, 07:38 PM IST
மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சார தொழில்... 21 வயது இளம் பெண்கள் மீட்பு..!

சுருக்கம்

பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து, அங்கிருந்த வாலிபரை மடக்கி பிடித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 இளம்பெண்களை மீட்டனர். 

சென்னை மேற்கு தாம்பரத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த 4 பெண்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை மேற்கு தாம்பரம் முத்துலிங்கம் தெருவில் பிரபல சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் உள்ளது. இதன், 2வது தளத்தை மசார்ஜ் சென்டர் நடத்த போவதாக கடந்த வாரம் ஒரு வாலிபர் வாடகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில், அங்கு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக தாம்பரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து, அங்கிருந்த வாலிபரை மடக்கி பிடித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 இளம்பெண்களை மீட்டனர். வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தியதில்  அவர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சடையப்பன்(28) என்பதும் அஸ்தினாபுரம், ஜாபர்கான்பேட்டை, கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய 2 பெண்கள், 28 வயதுடைய 2 பெண்கள் என 4 பேரை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. 

 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சடையப்பனை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்களை நீதிமன்றம் உத்தரவுப்படி காப்பாகத்தில் ஒப்படைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!