இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல.. மகளின் தோழியை கரெக்ட் செய்து பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை..!

Published : Aug 07, 2021, 01:59 PM IST
இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல.. மகளின் தோழியை கரெக்ட் செய்து பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை..!

சுருக்கம்

சிறுமியிடம் செல்போல் மூலம் விஜயகுமார் எஸ்எம்எஸ் அனுப்பி பழகி வந்தார். இதுகுறித்து தெரிந்தும் அவரது பெற்றோர் கண்டித்தனர். மேலும், சிறுமியிடமிருந்து செல்போனை வாங்கி கொண்டனர். இதனால், வேறு செல்போன் வாங்கி கொடுத்து  சிறுமியிடம் விஜயகுமார் மீண்டும் பழகி வந்தார். 

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மகளின் தோழியை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவர், ஜூயபுரம் அருகே தனது சித்தி வீட்டில் தங்கி இருந்தபோது எதிர்வீட்டில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் விஜயகுமார்(38) என்பவரின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. 

இதனால், இருவரும் தோழிகளாக மாறினர். இதனால், சிறுமியிடம் செல்போல் மூலம் விஜயகுமார் எஸ்எம்எஸ் அனுப்பி பழகி வந்தார். இதுகுறித்து தெரிந்தும் அவரது பெற்றோர் கண்டித்தனர். மேலும், சிறுமியிடமிருந்து செல்போனை வாங்கி கொண்டனர். இதனால், வேறு செல்போன் வாங்கி கொடுத்து  சிறுமியிடம் விஜயகுமார் மீண்டும் பழகி வந்தார். 

இந்நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை கட்டாயப்படுத்தி விஜயகுமார் பலாத்காரம் செய்துள்ளார். இதைதொடர்ந்து பழகுவதை சிறுமி நிறுத்திவிட்டார். இதனால், சிறுமியிடம் மதுபோதையில் விஜயகுமார் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து தெரிந்ததும் குழந்தைகள் நலவாரியத்துக்கு சிறுமியின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பலாத்காரம் செய்ததாக ஆட்டோ டிரைவர் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று  வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு