ஆர்யன்கானுக்கு ஜாமீன் கிடைத்தும் வெளியே வருவதில் சிக்கல்... நிபன்ந்தனைகள் விதித்த நீதிமன்றம்..!

By Thiraviaraj RMFirst Published Oct 28, 2021, 6:19 PM IST
Highlights

அலுவல் ரீதியிலான வேலைகள் நிலுவை, நீதிமன்றம், சிறை நடைமுறைகள் காரணமாக ஆர்யன் கான் இன்று சிறையில் இருந்து வெளியே வரமாட்டார்.

ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சண்ட் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும், அலுவல் ரீதியிலான வேலைகள் நிலுவை, நீதிமன்றம், சிறை நடைமுறைகள் காரணமாக ஆர்யன் கான் இன்று சிறையில் இருந்து வெளியே வரமாட்டார்.

இந்நிலையில், மும்பை போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கான் ஜாமீனில் வெளிவரக்கூடிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேற்கூறிய நடவடிக்கைகள் பற்றி எந்த அறிக்கையும் செய்யக்கூடாது.

குற்றம் சாட்டப்பட்டவர் தனிப்பட்ட முறையில் அல்லது யாரேனும் சாட்சி ஆதாரங்களில் செல்வாக்கு செலுத்தவோ அல்லது சிதைக்கவோ எந்த முயற்சியும் செய்யக்கூடாது

விண்ணப்பதாரர்கள் கிரேட்டர் மும்பைக்கு வெளியே செல்ல வேண்டியிருந்தால், அவர் விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை NCB மும்பை அலுவலகத்தில் கலந்து கொள்ள வேண்டும்

ஏதேனும் நியாயமான காரணத்தால் தடுக்கப்படாவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அனைத்து தேதிகளிலும் ஆஜராக வேண்டும்.

விசாரணை தொடங்கியதும், குற்றம் சாட்டப்பட்டவர் எந்த வகையிலும் விசாரணையைத் தாமதப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

குற்றம் சாட்டப்பட்டவர் இந்த விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், அவரது ஜாமீனை ரத்து செய்ய சிறப்பு நீதிபதி/நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்க NCBக்கு உரிமை உண்டு’’ என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2 ஆம் தேதி ஷாருக்கின் பிறந்தநாளுக்கு ஆர்யன் கான் வீட்டில் இருப்பார்.

இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பலான ‘எம்பிரஸ்’ மும்பையில் அக்டோபர் 2-ம் தேதி மதியம் 2 மணியளவில் சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையும் படியுங்கள்:- ஜெயலலிதாவுடன் சசிகலா இதற்காக தான் பழகினாரா? பொசுக்குனு இப்படி சொல்லிட்ட கே.பி.முனுசாமி..!

இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் அந்தக் கப்பலில் ஏறினர். கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை உறுதி செய்த அதிகாரிகள் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்யான் கானிடம் விசாரணை நடத்திய தேசிய போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை அக்டோபர் 8-ம் தேதி மும்பை ஆர்துர் சாலை சிறைச்சாலையில் அடைத்தனர். ஜாமின் கோரி ஆர்யான் இரண்டு மனுத் தாக்கல் செய்த நிலையில் இரண்டுமுறை அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆர்யன்கானுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

click me!