பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்று தாய் தற்கொலை.. அதிர வைக்கும் காரணம்..!

Published : Oct 28, 2021, 03:40 PM IST
பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்று தாய் தற்கொலை.. அதிர வைக்கும் காரணம்..!

சுருக்கம்

கணவன் மற்றும் மனைவிக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து, மனைவி தீபா தாய் வீட்டிற்கு அழைத்து செல்லும் படி கணவரிடம் கூறியுள்ளார். அப்போது வெள்ளிக்கிழமை அழைத்து செல்வதாக வெங்கடேஷ் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். 

குடும்ப தகராறு காரணமாக 7 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த நாட்றம்பாளையம் அருகே உள்ள மேட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தீபா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியருக்கு வர்ணிதா (3) மற்றும் 7 மாதத்தில் தனுஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளது. 

இதையும் படிங்க;- எந்நேரமும் பாதாம், பிஸ்தா.. 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உல்லாசம்.. வசமாக சிக்கிய உயரதிகாரியின் மகன்..!

இந்நிலையில், கணவன் மற்றும் மனைவிக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து, மனைவி தீபா தாய் வீட்டிற்கு அழைத்து செல்லும் படி கணவரிடம் கூறியுள்ளார். அப்போது வெள்ளிக்கிழமை அழைத்து செல்வதாக வெங்கடேஷ் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில், வர்ணிதாவை வீட்டில் தூங்க வைத்து விட்டு குழந்தை தனுஸ்ரீயுடன் தீபா திடீரென மாயமானார். 

இதையும் படிங்க;- எந்நேரமும் குடிபோதையில் மனைவிக்கு டார்ச்சர்.. ஆத்திரத்தில் கணவனை கழுத்தை இறுக்கி துடிதுடிக்க கொன்ற பயங்கரம்.!

இதனையடுத்து, தீபாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அஞ்செட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒருபுறமும் தேடினர். ஆனால் இருவரும் எங்கு சென்றனர் என்ற விவரம் கிடைக்கவில்லை . இதற்கிடையே அவர்கள் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் ஒரு பெண்ணும், குழந்தையும் பிணமாக மிதப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க;-கள்ளகாதலனுக்காக குழந்தையை அடித்து சித்திரவதை செய்தேன்.. சைகோ பெண் பகீர் வாக்கு மூலம்.. அதிர்ச்சியில் போலீஸ். 

உடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் பிணமாக கிடந்த 2 உடல்களையும் மீட்டனர். தற்கொலை செய்து கொண்டவர்கள் தீபா, தனுஸ்ரீ என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறில் மனம் உடைந்து தீபா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இதையும் படிங்க;- தூத்துக்குடியில் அரசு மருத்துவரின் அட்டூழியம்.. அரசு மருத்துவமனையில் ஊழியருடன் உல்லாசம்..!

இதனிடையே, தீபாவின் தந்தை கிருஷ்ணன் அஞ்செட்டி  காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதில், தன்னுடைய மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமையால் தன்னுடைய மகள் தற்கொலை செய்து கொண்டார் என கூறினார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் இளம்பெண் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!