வேலூரில் பயங்கரம்.. ஆண் நண்பரை அடித்து விரட்டி பாலாற்றங்கரையில் வைத்து இளம்பெண் கதற கதற கூட்டு பலாத்காரம்.!

Published : Mar 22, 2022, 12:32 PM IST
வேலூரில் பயங்கரம்.. ஆண் நண்பரை அடித்து விரட்டி பாலாற்றங்கரையில் வைத்து இளம்பெண் கதற கதற கூட்டு பலாத்காரம்.!

சுருக்கம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாலாற்றங்கரை செல்லும் சாலை வழியாக ஆட்டோவை திருப்பியபோது, அப்பெண் மீண்டும் ஆட்டோ டிரைவரிடம் தவறான வழியில் செல்வது பற்றி கேட்டார். உடனடியாக ஆட்டோவில் வந்தவர்கள் அப்பெண்ணுடன் வந்த ஆண் நண்பரை அடித்து சாலையில் இறக்கிவிட்டு பாலாற்றங்கரையோரம் அப்பெண்ணை மிரட்டி அழைத்து சென்றுள்ளனர்.

காட்பாடியில் நண்பருடன் சினிமா பார்த்துவிட்டு ஆட்டோவில் திரும்பிய வேலூர் தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

திடுக்கிடும் தகவல்

வேலூர் சத்துவாச்சாரி இந்திராநகரில் குடிபோதையில் சிலர் தகராறில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதில், 2 பேர் வழக்கத்துக்கு மாறாக டிப்-டாப் உடை அணிந்திருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர். 

பாலியல் பலாத்காரம்

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்: வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இளம்பெண் ஊழியர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் நண்பருடன் காட்பாடியில் உள்ள சினிமா தியேட்டரில் இரவு காட்சி பார்க்க சென்றுள்ளார். படம் முடிந்து நள்ளிரவு 12.30 மணியளவில் 2 பேரும் தியேட்டர் முன்பாக ஆட்டோவுக்காக காத்து நின்றனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அதன் டிரைவர் அவர்களிடம் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆட்டோவில் ஏற்கனவே 3 பேர் இருந்துள்ளனர். வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே ஷேர் ஆட்டோ சத்துவாச்சாரியை நோக்கி திரும்பியுள்ளது.  அந்த பெண் ஊழியர் ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது, வழியில் பேரிகார்டு வைத்து அடைத்துள்ளனர். சத்துவாச்சாரி சென்று ஆற்காடு சாலை வழியாக இருப்பிடம் செல்லலாம் என்று கூறி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை வழியாக வந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாலாற்றங்கரை செல்லும் சாலை வழியாக ஆட்டோவை திருப்பியபோது, அப்பெண் மீண்டும் ஆட்டோ டிரைவரிடம் தவறான வழியில் செல்வது பற்றி கேட்டார். உடனடியாக ஆட்டோவில் வந்தவர்கள் அப்பெண்ணுடன் வந்த ஆண் நண்பரை அடித்து சாலையில் இறக்கிவிட்டு பாலாற்றங்கரையோரம் அப்பெண்ணை மிரட்டி அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள பார் அருகே வைத்து 3 பேர் அந்த பெண் ஊழியரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு, செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு அப்பெண்ணை விரட்டியுள்ளனர்.

3 பேரிடம் விசாரணை

இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் இதுகுறித்து யாரிடமும் கூறவில்லை. தொடர்ந்து ஏடிஎம் கார்டு மூலம் பெண் ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தையும் எடுத்து சென்றுள்ளனர். அந்த பணத்தை பங்கிடும்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின்போதுதான் போலீசில் சிக்கினர். பிடிப்பட்ட 3 பேரிடமும் சத்துவாச்சாரி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை, அவரது ஏடிஎம் கார்டை வைத்து அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அந்த பெண் ஊழியரையும், அவரது நண்பரையும் நேரில் அழைத்து புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!