பிரபல பாடகரின் பெயரில் பெண்களை நிர்வாணமாக்கி அனுபவித்த ஃபேக் ஐடி வாலிபர்...

By Muthurama LingamFirst Published May 30, 2019, 1:42 PM IST
Highlights

பிரபல இந்திப்பாடகர் ஒருவரின் பெயரில் போலி முகநூல் கணக்கு ஒன்றைத் துவங்கி ஏராளமான பெண்களிடம் நூதனமான மோசடியில் ஈடுப்பட்ட தமிழக வாலிபர் ஒருவர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். அவரிடம் ஏமாந்த பல பெண்களின் நிர்வாணப் படங்களை போலீஸார் கைப்பற்றினர்.

பிரபல இந்திப்பாடகர் ஒருவரின் பெயரில் போலி முகநூல் கணக்கு ஒன்றைத் துவங்கி ஏராளமான பெண்களிடம் நூதனமான மோசடியில் ஈடுப்பட்ட தமிழக வாலிபர் ஒருவர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். அவரிடம் ஏமாந்த பல பெண்களின் நிர்வாணப் படங்களை போலீஸார் கைப்பற்றினர்.

பிரபல இந்திப் பாடகர் அர்மான் மாலிக். தமிழில் ஜீவா நடித்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் பாடியுள்ள அர்மான் மாலிக், தெலுகு,மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் சில பாடல்கள் பாடியுள்ளார். முகநூலில் பெண்கள் மத்தியில் அவருக்கு உள்ள செல்வாக்கை தனது சுயநலத்துக்குப் பயன்படுத்த நினைத்த உளுந்தூர்ப்பேட்டையைச் சேர்ந்த மகேந்திரவர்மன் என்ற இளைஞர் பாடகர் பெயரில் ஒரு முகநூல் கணக்கு துவங்கி பெண்களுடன் சாட் செய்ய ஆரம்பித்தார்.

அந்த ஃபேஸ்புக் கணக்குகளின் மூலம் பல பெண்களிடம் நட்பைத் தொடர்ந்த மகேந்திரவர்மன் தன்னை அர்மான் மாலிக் என்று நம்ப வைக்க பாடகர் தொடர்பான அத்தனை அப்டேட்களையும் தனது பக்கத்தில் நம்பும்படி பகிர்ந்துவந்தார்.மேலும், தன்னிடம் பழகிய பெண்களிடம் கவர்ச்சியான தனிப்பட்ட புகைப்படங்களையும், குறிப்பாக அவர்களது நிர்வாணப்படங்களையும்  ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக பெற்றுள்ளார். ஒருகட்டத்தில் தான் கேட்கும் நகை, பணம் ஆகியவற்றை கொடுக்காவிட்டால் அந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோவை குற்றப்பிரிவு போலீசார் மகேந்திரவர்மனை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும் ஏராளமான பெண்களின் அந்தரங்க விபரங்கல்ளைத் திரட்டி அவர்களை செக்ஸ் ரீதியாக மிரட்டி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!