கள்ளக்காதலி மீது சந்தேகம்... உயிரோடு எரித்து கொன்ற கள்ளக்ககாதலன்!! தீயில் கருகிய பெண் மரண வாக்குமூலம்...

Published : May 29, 2019, 05:38 PM ISTUpdated : May 29, 2019, 05:40 PM IST
கள்ளக்காதலி மீது சந்தேகம்... உயிரோடு எரித்து கொன்ற கள்ளக்ககாதலன்!! தீயில் கருகிய பெண் மரண வாக்குமூலம்...

சுருக்கம்

அம்பத்தூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பெண் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனை  கைது செய்தனர். 

அம்பத்தூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பெண் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனை  கைது செய்தனர். 

அம்பத்தூர் அடுத்த பாடி, பஜனைக்கோயில் தெருவை சேர்ந்தவர் தேவியின் கணவர் சங்கர், இவர்களுக்கு  2 மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 15 ஆண்டுக்கு முன்பாக குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் நடந்த கலவரத்தில் சங்கர் இறந்துவிட்டார்.இருவரும் திருமணமாகி கணவனுடன் சென்னையில் வசிக்கின்றனர். 

கடந்த சில ஆண்டுக்கு முன் தேவிக்கு சென்னை ஓட்டேரியை சேர்ந்த வீட்டு புரோக்கர் தங்கராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் கள்ளதொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பால் கணவன் இல்லாத காரணத்தால் கணவன் போலவே திருமணம் செய்து கொள்ளாமல் தேவி வசித்து வந்தார். ஆனால், கள்ளக்காதலன் தங்கராஜிக்கு ஏற்கனவே கல்யாணமாகி மனைவி  மற்றும் இரு மகன்கள் உள்ளனர். ஆனால் அவர்களும்  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், தங்கராஜ் வேலை முடிந்து அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கள்ளக்காதலி  தேவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு செய்து வந்துள்ளார். 

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், குடிபோதையில் தங்கராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தேவிக்கும், தங்கராஜூக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது தேவியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அலறல் சத்தத்தால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, தேவி உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது, உடனடியாக தேவியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக இறந்தார்.

தேவி இறப்பதற்கு முன்பாக நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், ‘‘நானும், தங்கராஜும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். ஆனால் எனது நடந்தையில் சந்தேகப்பட்டு அவர்   மண்ணெண்ணெய் ஊற்றி  தீ வைத்து எரித்தார் என கூறியுள்ளார். இதுகுறித்து கொரட்டூர்  போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த  கள்ளக்காதலனை தங்கராஜை  கைது செய்தனர்.  

PREV
click me!

Recommended Stories

நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!
ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!