"வீட்டிற்கு வா"... நம்ம நட்பை வளர்த்துக் கொள்ளலாம்.. லீக்கான ஆபாச ஆடியோ.. வசமாக சிக்கிய பேராசிரியர்.!

By vinoth kumarFirst Published Apr 8, 2022, 10:39 AM IST
Highlights

மாணவி, ‘நான் ஏன் உங்கள் வீட்டிற்கு வர வேண்டும்’ என கேட்டுள்ளார். அதற்கு, ‘நட்பை வளர்த்துக் கொள்ளலாம்’ என உதவி பேராசிரியர் பதில் அளித்துள்ளார். சிறிது நேரம் ஒன்றும் புரியாத மாணவி, பின்னர், சுதாரித்துக்கொண்டு அப்படி எல்லாம் நட்பை வளர்க்க தேவையில்லை என கூறியுள்ளார்.

கல்லூரி மாணவியை பேராசிரியர் தனது வீட்டுக்கு அழைக்கும் ஆபாச ஆடியோ வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பேராசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆபாச பேச்சு

திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரியில் உள்ள அரசு கலை கல்லூரியில் மகேந்திரன் (59) என்பவர் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் இறுதி ஆண்டு படிக்கும் அந்த கல்லூரி மாணவியின் தொலைபேசிக்கு கடந்த மாதம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, அந்த மாணவியை வீட்டிற்கு வரச் சொல்லியும், இறுதியாண்டு படித்து வருவதால் வீட்டுக்கு வந்தால் உபயோகமாக இருக்கும் எனவும் பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து, மாணவி, ‘நான் ஏன் உங்கள் வீட்டிற்கு வர வேண்டும்’ என கேட்டுள்ளார். அதற்கு, ‘நட்பை வளர்த்துக் கொள்ளலாம்’ என உதவி பேராசிரியர் பதில் அளித்துள்ளார். சிறிது நேரம் ஒன்றும் புரியாத மாணவி, பின்னர், சுதாரித்துக்கொண்டு அப்படி எல்லாம் நட்பை வளர்க்க தேவையில்லை என கூறியுள்ளார்.

ஆடியோ வைரல்

மேலும், தனக்கு ஒரு சில பாடக்குறிப்புகள் வேண்டும் எனவும் அதை கூகுளில் பிரின்ட் அவுட் எடுத்து கொடுக்க வேண்டும் எனவும் அதற்கான காசை கொடுத்து விடுவதாகவும் மாணவியிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்த மாணவி என் பெற்றோர் அதுபோன்று எங்கேயும் வெளியே அனுப்ப மாட்டார்கள். நானே இதுவரை எங்கு சென்றும் பிரின்ட் அவுட் எடுத்தது இல்லை. எதற்காக என்னிடம் அப்படி கேட்டீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு உதவி பேராசிரியர், ‘நீயும் நமது சாதியை சேர்ந்த பெண்தான். அதனால் நட்பை வளர்க்கலாம்’ என கூறியிருக்கிறார். உதவிப் பேராசிரியர் மாணவியை வற்புறுத்தி தனது வீட்டுக்கு அழைக்கும் இந்த ஆடியோ பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பேராசிரியர் கைது

இந்நிலையில்,  பொன்னேரி காவல்துறையினர் இதுகுறித்து  விசாரணை நடத்தினர். அதில், பேசியது பேராசிரியர் மகேந்திரன் என்பது தெரியவந்தது. அவரை காவல் நிலையத்தில் 4 மணி நேரம் விசாரணை நடந்தது. இதன்பின் அவர் மீது 5 வழக்குகள் பதிந்து கைது செய்தனர். பின்னர் பொன்னேரி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு  புழல் சிறையில் அடைத்தனர்.

click me!