பாத்ரூமில் வழுக்கி விழுந்த புள்ளிங்கோ... சென்னை போலீஸ் ஸ்டைலில் மாவு கட்டு போட்டு அழகு பார்த்த புதுவை போலீஸ்!!

By sathish kFirst Published Oct 2, 2019, 4:45 PM IST
Highlights

பொதுமக்கள் முன்னிலையில் போலீஸ்காரர்களை வெறித்தனமாக தாக்கிவிட்டு எஸ்கேப்  ஆன ரவுடி, தவறி விழுந்து காலை முறித்துக் கொண்டுளார். புதுச்சேரி காவல்துறை வரலாற்றில் முதல்முறையாக சென்னை போலீஸ்  ஸ்டைலில் மாவுக்கட்டு போட்டு அழகு பார்த்துள்ளது புதுச்சேரி போலீஸ்.

பொதுமக்கள் முன்னிலையில் போலீஸ்காரர்களை வெறித்தனமாக தாக்கிவிட்டு எஸ்கேப்  ஆன ரவுடி, தவறி விழுந்து காலை முறித்துக் கொண்டுளார். புதுச்சேரி காவல்துறை வரலாற்றில் முதல்முறையாக சென்னை போலீஸ்  ஸ்டைலில் மாவுக்கட்டு போட்டு அழகு பார்த்துள்ளது புதுச்சேரி போலீஸ்.

புதுச்சேரியில் ரவுடிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் தலைவிரித்தாடுகிறது,  அரசியல் கட்சி பிரமுகர்களுடன் சுட்டி திரிவதால், எந்த பயமும் இல்லாமல்  கொலை, கொள்ளை, போனில் மிரட்டிப் பணம் பறிப்பது, கஞ்சா விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக காவல்துறையினரிடம் ரவுடிகளுக்கு இருக்கும் பயத்தில் ஒரு சதவிகிதம்கூட, புதுச்சேரி போலீசாரிடம்  தற்போது டி.ஜி.பி-யாக பொறுப்பேற்று உள்ள பாலாஜி ஸ்ரீவத்சவா புதுச்சேரியில் ரவுடிப் பட்டியலில் இருப்பவர்களின் விவரங்கள், செயல்பாடுகள் போன்றவற்றைக் கண்காணிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கரிக்கலாம்பாக்கம் காவல் நிலைய பணியில் இருந்த போலீஸ்காரர்களான சிவகுரு மற்றும் மைக்கேல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, கரிக்கலாம்பாக்கம் மக்கள் கூடும் பிரதான சந்திப்பில் கையில் கத்தியுடன் சில ரவுடிகள் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக தகவல் விரைந்து வந்த காவலர்கள் இருவரும் அங்கு சென்று விசாரித்த போது, ரகளையில் ஈடுபடவர்கள் சிதம்பரம் பெட்ரோல் பங்க் ஊழியர்களைக் கத்தியால் தாக்கிப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற ஜோசப், அவனது கூட்டாளிகளான அய்யனார் மற்றும் அருணாசலம் என்பது தெரியவந்தது. அவர்களில் முக்கிய ரவுடி ஜோசப்பை மடக்கி பிடித்தனர்.

ரவுடியை இருசக்கர வாகனத்தில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துவர முயற்சித்த சமயத்தில், தப்பி ஓடிய ரவுடிகள் இருவரும் வந்து போலீசாரை தடுத்தனர். இதை சாதகமாக்கிய ரவுடி ஜோசப் கூட்டாளிகளுடன் சேர்ந்து போலீசை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடினான்.

நடுரோட்டில் போலீஸ்காரர்களை வெறித்தனமாக ரவுடிகள் புரட்டி எடுத்ததைப் பார்த்து அப்பகுதி மக்கள் அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுக்க, அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட 2 போலீஸாரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீஸ்காரர்களை தாக்கி தலைமறைவான ரவுடிகள் மீது கொலை  வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

குற்றவாளிகளில் ஒருவனான ரவுடி ஜோசப், கண்டமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அதிரடிப்படை போலீசார் மற்றும் வில்லியனூர் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து அங்கு சென்றனர்.

கண்டமங்கலத்தை அடுத்த ஆலமரத்து குப்பம் கரும்பு தோட்டத்தில் ஜோசப் பதுங்கி இருப்பதை கண்டு அவனை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதை கண்ட உடன் தப்பித்து ஓடினான் ஜோசப். அவனை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயற்சித்தபோது போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த ஜோசப்புக்கு வலது கை மற்றும் இடது காலில் முறிவு ஏற்பட்டது. போலீசாரை தாக்கிய ரவுடி என்றாலும் அவனை மீட்டு மனிதாபிமானத்துடன் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சென்னை போலீஸ் ஸ்டைலில் மாவுக்கட்டு போட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

புதிய டிஜிபி பாலாஜி ஸ்ரீ வத்சவா உத்தரவின் பேரில் போலீசாரை தாக்கிய ரௌடிக்கு மாவுக்கட்டு போடப்பட்டது இதுவே முதல்முறை.  மேலும் இரு ரவுடிகளைத் தேடி வரும் நிலையில் அந்த ரவுடிகளும் விரைவில் பாத்ரூமில் வழுக்கி விழுவார்கள் என்றும் அவர்களுக்கும் சிறப்பான முறையில் மாவுக்கட்டு போடுவார்கள் என சொல்லப்படுகிறது.

click me!