பழைய டெக்னிக் யூஸ் பண்ணிய பலே கேடிகள்... மூட்அவுட் ஆன அர்ஜுன்!! குழம்பி நிற்கும் போலீஸ்...

By sathish kFirst Published Oct 2, 2019, 3:07 PM IST
Highlights

குழந்தைகள் விளையாடும் முகமூடி,  க்ளவுஸ் அணிந்திருந்ததால் கைரேகைகள் சிக்கவில்லை, சிசிடிவி காட்சிகளை கொண்டுமேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் அதிலும் எதுவும் தேறவில்லை.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் நேற்றிரவு வழக்கம் போல பணிகளை முடித்து விட்டு ஊழியர்கள் புறப்பட்டுச் சென்ற நிலையில், இரவில் வழக்கம் போல 6 செக்யூரிட்டி பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். காலையில் வழக்கம் போல மீண்டும் கடையை திறந்து பார்த்த போது,ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஷோ கேசில் இருந்த நகைகள் ஒரு கிராம் கூட விடாமல் துடைத்து வாரிச் சென்றுள்ளது அந்த கும்பல்.

இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட மூத்த பல அதிகாரிகள்,கடையில் ஆய்வு நடத்தியதில், கடையின் மேற்கு பகுதியில் சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு ஓட்டை போட்டு, 36 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ நகைகள் அள்ளிக்கொண்டு சென்றுள்ளனர். மொத்தம் 3 தளங்கள் உள்ள நிலையில் தரை தளத்தில் மட்டும் மொத்த தங்க, வைர நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த 6 காவலாளிகள், சிசிடிவி கேமராக்கள் என அனைத்தும் இருந்தும்  சிக்காமல் மொத்தமாக ஆட்டையை போட்டுக்கொண்டு சென்றது மர்ம கும்பல்.

சரி, மோப்ப நாய் அர்ஜுனை வரவழைத்து கண்டுபிடிக்கலாம் என பார்த்தால்  மோப்பம் பிடிக்க முடியாத வகையில் கொள்ளையர்கள் வழியெங்கும் மிளகாய் பொடியை தூவிச் சென்றுள்ளதா, நம்ம அர்ஜுன் பயங்கர அப்செட் ஆக்கிவிட்டு சென்றுள்ளது, இந்த கேடி கும்பல். சிசிடிவியில் ஏதாவது சிக்குமா என ரீல் தேய தேய பார்த்தாலும் ஒன்னும் பிடிபடல, வீடியோவில் இரு கொள்ளையர்கள் முகமூடி அணிந்து உள்ளே சென்றிருப்பது தெரிகிறது.  

அதிகாலை 2.11 முதல் 3.15க்குள் கொள்ளை சம்பவம் நடத்திய இந்த கொள்ளை நடத்திய இவர்கள், விலங்குகளின் முகங்கள் போல குழந்தைகள் விளையாடும் முகமூடிகளை கொள்ளையர்கள் அணிந்திருந்ததாகவும்,  உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைகளை அணிந்துகொண்டும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். 

கடைசியாக கைரேகைகள் ஏதாவது சிக்குமா என பார்த்தால் அதுவும் இல்லை, சின்ன துண்டு சீட்டு இருந்தாலே நொண்டி நுங்கெடுத்துவிடும் நம்ம ஊரு போலீஸ், ஆனால் கொள்ளையர்கள் குழந்தைகள் அணியும் பொம்மை முகமூடி, மோப்பம் பிடிக்காமல் இருக்க மிளகாய் பொடி, கை கிளவுஸ் என பழைய டெக்னிக் யூஸ் பண்ணியிருப்பதால் போலீசாரே குழம்பி இருக்கின்றனர். ஆனால் சில மணி நேரங்களிலேயோ அல்லது விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில் அந்த கும்பலை நம்ம போலீசு தூக்கிவிடும் என்பது மட்டும் உண்மை.

click me!