கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காவல் ஆய்வாளர் உள்பட இருவர் உடல் கருகி உயிரிழந்த விவகாரம் விபத்து கிடையாது என்பதை காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாத் (வயது 40). இவர் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அண்மையில் இறந்துவிட்டதாகவும், அதன் பின்னர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு விட்டதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களவில் அவ்வபோது இந்த வீட்டில் வந்து தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆய்வாளர் சபரிநாத் கடந்த வியாழன் கிழமை காலை வீட்டில் இருக்கும் போது பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு கீழ் வீட்டில் குடியிருப்பவர்கள் உடனடியாக மேலே வந்து பார்த்துள்ளனர். அப்போது ஆய்வாளர் சபரிநாத் மற்றும் கீழ் வீட்டைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணும் எரிந்த நிலையில் கிடந்தனர். இது தொடர்பாக காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் தீயை அனைத்து உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தொடக்கத்தில் வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்த காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.
நாங்கள் தான் எதிர்க்கட்சி.. ஆளுமை இல்லாத இபிஎஸ்.. கடுப்பாகி டக்கென மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்..!
விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள அறிக்கையில் பிரிட்ஜ் வெடித்த காரணத்தினாலோ, மின் கசிவு ஏற்பட்டதனாலோ தீ விபத்து நிகழ்ந்ததற்கான தடயங்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: உதகையில் ஆளுநர் ரவிக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு
மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சபரிநாத் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த தனது மனைவியின் மருத்துவ செலவுக்காக அதிக அளவில் கடன் பெற்றதாகவும், தற்போது அந்த கடனுக்கு வட்டி சேர்ந்து சுமார் 1 கோடிக்கும் மேல் அவருக்கு கடன் சுமை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். கடன் தொல்லை தாங்காமல் சபரிநாத் தற்கொலை செய்துகொண்டாரா? கீழ் வீட்டில் குடியிருந்த சாந்தி எதற்காக மேலே சென்றார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.