இன்ஸ்டாகிராமில் காதல்.. ஆபாச மெசேஜ்.. சிறுமிகளிடம் அத்துமீறிய “டெலிவரி பாய்ஸ்” கொடூர சம்பவம் !

Published : Mar 13, 2022, 11:21 AM IST
இன்ஸ்டாகிராமில் காதல்.. ஆபாச மெசேஜ்.. சிறுமிகளிடம் அத்துமீறிய “டெலிவரி பாய்ஸ்” கொடூர சம்பவம் !

சுருக்கம்

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் வன்புணர்வு செய்த உணவு டெலிவரி பாய்ஸ்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இன்ஸ்டாகிராம் காதல் :

கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இரண்டு சிறுமிகளை மார்ச் 5ம் தேதி முதல் காணாமல் போயிருக்கிறார்கள். இது தொடர்பாக பத்தனம்திட்டா போலிஸிடம் பள்ளி நிர்வாகத்தினர் புகாரளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதன்படி, சிறுமிகள் கடைசியாக சென்று வந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில், காணாமல் போன அந்த மாணவிகள் இருவரையும் காரில் ஏற்றி கடத்திச் செல்லும் நிகழ்வு பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் மாணவிகளை கடத்தியவர்களை கார் எண்ணை வைத்து தேடி வந்தனர்.

டெலிவரி பாய்ஸ் :

அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பள்ளி மாணவிகளை கடத்தியது பத்னபுரத்தைச் சேர்ந்த அஃப்சல் முகமது (22) மற்றும் ஆகாஷ் உதயன் (18) ஆகிய இருவர் என தெரியவந்தது. மாணவிகளை கடத்திய அவர்கள் இருவரையும் கொன்னி காவல்நிலைய போலிஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருவரும் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும், கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. அந்த வகையில் கடந்த மார்ச் 5ம் தேதி காரில் ஏற்றி கடத்த அந்த சிறுமிகளை அஃப்சலும், ஆகாஷும் சேர்ந்து பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!