
கோயிலுக்கு சென்ற பெண் மாயம்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள விஷ்ணுபுரி காலனியைச் சேர்ந்தவர் உமா தேவி(56), இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சுயம்பு சித்தி விநாயக கோயிலுக்குச் கடந்த 18 ஆம் தேதி சென்றுள்ளார். மாலை நேரத்தில் கோயிலுக்கு சென்றவர் வீடு திரும்பவலில்லை, இதனையடுத்து உமா தேவியின் கணவன் அந்த பகுதி முழுவதும் தேடிய நிலையில் இரவு நேரத்தில் காவல்நிலையத்தில் உமா தேவியின் கணவர் மூர்த்தி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசாரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலில் இருந்த 10 சிசிடிவி கேமாரக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். அந்த கேமராக்கள் எதுவும் வேலை செய்யவில்லையென்பது தெரியவந்தது. இதனையடுத்து அடுத்தநாள் கோயிலின் பின்புறம் உள்ள புள்வெளிப்பகுதியில் ரத்தகாயங்களோடு உமாதேவியின் உடல் கிடந்துள்ளது.
கோயில் கருவறையில் பெண் கொலை
உமாதேவியின் உடலை கைப்பற்றிய போலீசார், விசாரணை மேற்கொண்டனர் அப்போது உமாதேவி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் உமாதேவியை நகைக்காக கொலை செய்ததாக கோயிலின் பூசாரி முரளி கிருஷ்ணா ஒப்புக்கொண்டுள்ளார். கொள்ளையடித்த நகைகளை நகைக்கடைக்காரரிடம் கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை பூசாரி பெற்றுள்ளார். இதனையடுத்து இரண்டு வளையல்களையும், ஒரு லட்சம் ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பூசாரியை கைது செய்த போலீசார்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், உமாதேதி(56) கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது நம்பிக்கையை பயன்படுத்தி பூசாரி கருவறைகுள் வைத்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் ரத்த காயங்களோடு இருந்தவரை டிரம்மில் வைத்து அடைத்துள்ளார். கோயில் கருவறையில் இருந்த ரத்த கறைகளை பூசாரி கழுவியுள்ளார். கோயில் பூசாரி என்பதன் காரணமாக போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வரவில்லை, இதனையடுத்து கோயில் அருகில் இருந்த தள்ளுவண்டியில் வைத்து உமாதேவியின் உடலை வெளியே கொண்டு செல்ல பூசாரி திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்ததன் காரணமாக அடுத்தநாள் கோயிலில் இருந்து புள்வெளி பகுதியில் உடலை போட்டுள்ளார். உமாதேவியை பூசாரி கடைசியாக பார்த்த காரணத்தால் அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக பூசாரி முரளி கிருஷ்ணாவை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை பூசாரி ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து பூசாரி மற்றும் நகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.