போலி க்யூ ஆர் கோடு மூலம் 17 லட்சம் மோசடி.! மொபைல் கடைக்காரரை ஏமாற்றி விட்டு ராஜஸ்தானிற்கு எஸ்கேப் ஆன ஊழியர்

By Ajmal Khan  |  First Published Oct 2, 2023, 11:27 AM IST

போலி க்யூ ஆர் கோடு மூலம் 17 லட்சம் மோசடி செய்து தலைமறைவான ஊழியரிடம் பணத்தை திருப்பி கேட்ட போது துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என மிரட்டல் விடுத்த ஊழியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  
 


 மொபைல் கடையில் மோசடி

தேனியில் மொபைல் உதிரி பாகங்கள் கடை வைத்து சில்லரையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்து வருபவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மதன் சிங்,  தனது கடையில் அதே மாநிலத்தை சேர்ந்த தூதராம் என்பவரை அழைத்து வந்து பணியில் அமர்த்தியுள்ளார். கடந்த 2 வருடங்களாக தனது கடையில் தூதராம் பணிபுரிந்து வந்த நிலையில் அவரை கடையின் மேலாளராக  பதவி உயர்வு வழங்கி பொறுப்பையும் ஒப்படைத்துள்ளார்.  

Tap to resize

Latest Videos

இந்நிலையில்  தனது தந்தை உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவரை பார்ப்பதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு மதன் சிங் செல்ல திட்டமிட்டவர்,  இதனையடுத்து தூதராமிடம் கடையின் முழு பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார். 

போலி க்யூ ஆர் கோடு 

சுமார் நான்கு மாதங்களுக்கு பிறகு கடந்த வாரம் தேனி திரும்பியவர் கடையின் வரவு செலவுகளை பார்த்துள்ளார். அப்போது வங்கி கணக்கில் பணல் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து கடையில் உள்ள  டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்காக வைக்கப்பட்டிருந்த  க்யூ ஆர் ஸ்கேனை பார்த்த போது  மதன் சிங்கின்  க்யூ ஆர் கோடிற்கு பதிலாக   தூதராம் தனது வங்கியின் அக்கவுண்ட் உள்ள க்யூ ஆர் ஸ்கேனை வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 4 மாதங்களில் சுமார் 17 லட்சம் வரை மோசடி செய்த தூதராம் பணத்தோடு எஸ்கேப் ஆகியுள்ளார்.

துப்பாக்கி காட்டி மிரட்டல்

இதனையடுத்து மோசடியில் ஈடுபட்டு தப்பி ஓடிய தூதராமை வீடியோ காலில் தொடர்பு கொண்டு மதன் சிங் பேசியுள்ளார்.அப்போது  பணத்தை திருப்பி கேட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று வீடியோ காலில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த மதன் சிங் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

சேர்த்துவைத்த மொத்தமும் போச்சு.. ஆன்லைன் மோசடியில் சிக்கிய முதியவர் - சிங்கப்பூரர்களே ஜாக்கிரதையா இருங்க!

click me!