ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்... கடிதம் எழுதிவைத்துவிட்டு ஒருவர் தற்கொலை!!

By Narendran S  |  First Published Mar 5, 2023, 8:28 PM IST

சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த ஒருவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த ஒருவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் சுரேஷ். 42 வயதான இவர் ஜெராக்ஸ் இயந்திரத்திற்கான டோனர் மை சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் சுரேஷ் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வகுப்பறையில் பாடம் நடத்தும்போது மாரடைப்பு ஏற்பட்டு பள்ளி ஆசிரியர் மரணம்

Tap to resize

Latest Videos

மேலும் அதில் ரூ.16 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்தவர் அவர், வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளிடம் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சுரேஷை காணவில்லை என அவரது மனைவி தேடியுள்ளார். செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதை அடுத்து சுரேஷின் மனைவி இதுக்குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: 13 வயது சிறுவனுடன் தகாத உடலுறவு.. குழந்தை பெற்ற 31 வயது பெண்.. கதறும் சிறுவனின் தாய்!!

அதன்பேரில் வீட்டை ஆய்வு செய்த போது, சுரேஷ், தனது மனைவி ராதா மற்றும் 2 குழந்தைகளுக்கு கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தது தெரியந்தது. அதில், ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சம் இழந்ததால் என்னால் கடனில் இருந்து மீளமுடியவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள் என்று எழுதியுள்ளார். மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேஷை தேடி வந்த நிலையில் மெரினா கடற்கரையில் சுரேஷ் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!