Heart Attack: வகுப்பறையில் பாடம் நடத்தும்போது மாரடைப்பு ஏற்பட்டு பள்ளி ஆசிரியர் மரணம்

By SG Balan  |  First Published Mar 5, 2023, 4:03 PM IST

ஆந்திராவில் அரசுப் பள்ளி ஆசிரியர் பாடம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனார்.


ஆந்திரப் பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள வேடபாலத்தில் அருகே உள்ள வாகவரிபாளையம் அரசுப் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்த ஆசிரியர், வீரபாபு. இவர் சனிக்கிழமை பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பாடம் நடத்திக்கொண்டிருந்தவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதைப் பார்த்து அச்சம் அடைந்த மாணவர்கள் ஓடிச் சென்று அருகில் மற்ற ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு வீரபாபுவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிதோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டனர். வகுப்பறையில் படம் நடத்திக்கொண்டிருந்த சில நிமிடங்களில் மாரடைப்பால் இறந்தது மாணவர்களையும் பள்ளி நிர்வாகத்தினரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Andrey Botikov: ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானி கழுத்தை நெறித்துக் கொலை!

இச்சம்பவம் பற்றி அறிந்த காவல்துறையினர் விசாரணை நடந்தி வருகின்றனர். உயிரிழந்த ஆசிரியர் வீரபாபுவுக்கு 45 வயது ஆகிறது என்றும் அவர் அருகில் உள்ள இன்கொல்லு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இள வயதில் திரீட் மாரடைப்பு, நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழப்பது குறித்த செய்தி அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது. தினமும் சிறிது நேரம் உடல் உழைப்பு செய்துவந்தால் இதய நோய்கள் பலவும் ஏற்பாடுவதைத் தவிர்க்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. அண்மையில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. நாள்தோறும் 10 நிமிடங்கள் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் செய்துவந்தால் இளவயது மரணங்களை தவிர்க்கலாம் என்று அந்த ஆய்வு ஆலோசனை வழங்குகிறது.

Walking: தினமும் 10 நிமிடம் நடந்தால் போதும், மரணத்தை வெல்லலாம்! மாரடைப்பு, புற்றுநோய் அபாயமும் இல்லை!

click me!