சிறுமியை மிரட்டி கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியே சொன்னால் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளனர்.
மாடு மேய்க்க சென்றபோது கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி வேதனை தாங்க முடியாமல் தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மோவூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி மாடு மேய்க்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் சேர்ந்து அந்த சிறுமியை மிரட்டி கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியே சொன்னால் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் அடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை ஊடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, சிறுமியின் உடல் நிலை சீரானதை அடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில், தீடீரென அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி, சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கூட்டு பலாத்காரம் செய்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.