பெற்றோர்களே எச்சரிக்கை... மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த குழந்தை.. ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு.

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2021, 8:27 AM IST
Highlights

செல்வத்தில் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம், ஆனால் குழந்தைகளை பராமரிப்பதில், அவர்களை கவனித்துக் கொள்வதில் சில பெற்றோர்கள் மத்தியில் ஒருவகை அலட்சியம் காட்டப்படுவது அந்தக் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது.

மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென தவறிக் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.செல்வத்தில் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம், ஆனால் குழந்தைகளை பராமரிப்பதில், அவர்களை கவனித்துக் கொள்வதில் சில பெற்றோர்கள் மத்தியில் ஒருவகை அலட்சியம் காட்டப்படுவது அந்தக் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது. 

சமீபத்தில் பிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது அதிபோன்ற அலட்சியத்திற்கு ஒரு உதாரணம். இந்த வரிசையில் சென்னையில் மூன்றாவது மாடி பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென கீழே விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மண்ணடி இப்ராஹிம் சாகிப் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வகனி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆசியா என்ற இவரது குழந்தை மூன்றாவது மாடியில் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த குழந்தை பால்கனி கம்பியில் ஏரி கீழே விழுந்தது.

அதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் 2 மணிநேரம் போராடினர் ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது  ஒன்றரை மாத குழந்தை மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் கவனமாக இருந்திருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்காது என்றும் பலர் விமர்சிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

click me!