5 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபர் அதிரடி கைது; நகைகள் மீட்பு

Published : Dec 07, 2023, 08:53 AM IST
5 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபர் அதிரடி கைது; நகைகள் மீட்பு

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 65). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருசாமி இறந்து விட்டார். முத்துலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த மாதம் 19ம் தேதி நடந்த உறவினர் இல்லத் திருமணத்திற்கு முத்துலட்சுமி வருவதாக உறிவினர்களிடம் கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும்  முத்துலட்சுமி திருமண வீட்டிற்கு வரவில்லை என்றதும், உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்வாசலில் படிக்கட்டு அருகே முத்துலட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொலை குறித்து தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துலட்சுமியின் உடலைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ் மேற்பார்வையில் தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கொலை செய்யப்பட்ட மூதாட்டி வீட்டு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற கூலி தொழிலாளி அடிக்கடி சென்று வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் அவரை தேடிய போது தலைமறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சண்முகசுந்தரம் (54) பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சண்முகசுந்தரத்தினை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முத்துலெட்சுமி கணவர் இல்லை, அவருக்கு குழந்தையும் இல்லை என்பதால் தனியாக வசித்து வருவதை நீண்ட நாள்களாக நோட்டமிட்டு வந்ததாகவும், தனியாக இருக்கும் அவரிடம் இருக்கும் நகையை பறித்தால், தனக்கு இருக்கும் கடனை அடைத்து விட்டு சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து, நகையை பறிக்க முயன்றதாகவும், அதனை அவர் தடுக்கவே, முத்துலெட்சுமியை கொலை செய்து விட்டு நகைகளை பறித்து கொண்டு தப்பியோடியதாக சண்முகசுந்தரம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சண்முகசுந்தரத்தினை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகையை மீட்டுள்ளனர். ஆடம்பரமாக இருக்க, கடனை அடைக்க மூதாட்டியை கொலை செய்து கூலி தொழிலாளி நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!