5 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்துக் கொன்ற முதியவர்… கரும்புத் தோட்டத்துக்குள் பிணமாக்கிய கொடூரம் !!

Published : Jan 16, 2019, 08:23 PM ISTUpdated : Jan 16, 2019, 08:26 PM IST
5 ஆம் வகுப்பு  மாணவியை கற்பழித்துக் கொன்ற முதியவர்… கரும்புத் தோட்டத்துக்குள் பிணமாக்கிய கொடூரம் !!

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை 60 வயது முதியவர் கற்பழித்துக் கொன்ற கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள தென் முடியனூரை சேர்ந்தவர் விஜயகுமார். – அன்புகுமாரி தம்பதிகளின் மகள்  கீதா. இவர்கள் இருவரும் விவசாய கூலித்தொழிலாளி என்பதால், சிறுமி கீதா, அதே கிராமத்தில் வசிக்கும் தாய்வழி பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள கரும்புத்தோட்டத்தில் சிறுமி கீதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த  பொது மக்கள் தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்..

சிறுமியின் கழுத்து மற்றும் பிறப்புறுப்பில் ரத்தகாயங்கள் இருந்தன.அந்த சிறுமியை யாரோ கற்பழித்து  கொலை செய்தது தெரியவந்தது.

இதனிடையே போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சிறுமி கீதாவை அதே கிராமத்தை சேர்ந்த விவசாய கூலிதொழிலாளி கணேசன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்தனர்.

இந்த கொடூர சம்பவம் தென்முடியனூர் கிராமத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!