நர்சிங் மாணவிக்கு திருமண ஆசை காட்டி உல்லாசம் … இளைஞர் கைது !!

Published : Aug 16, 2019, 10:25 PM IST
நர்சிங் மாணவிக்கு திருமண ஆசை காட்டி உல்லாசம் … இளைஞர் கைது !!

சுருக்கம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருமண ஆசைகாட்டி நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரையும் இதற்கு உடந்தையாக இருந்த அவரின் தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் எல்லப்பன். இவரது மகள் மதுரை தல்லாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் நர்சிங் படித்து வருகிறார்.
இவர் புதூர் மூன்று மாவடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பயிற்சிக்கு சென்றபோது அவருக்கும் அங்கு சிகிச்சை பெற்ற உத்தப்புரத்தைச் சேர்ந்த ராமர் மகன் ராஜேஸ்வரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 11-ந்தேதி ராஜேஸ்வரன் அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்தது.

இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் உத்தப்புரத்தில் உள்ள ராஜேஸ்வரன் வீட்டுக்கு சென்று தனது மகளை தங்களுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனிடையே நேற்று ராஜேஸ்வரன் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக மாணவியின் பெற்றோர் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் மீனா உத்தப்புரத்தில் உள்ள ராஜேஸ்வரன் மற்றும் அவரது தாயார் ஈஸ்வரி ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
மேலும் மைனர் பெண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக ராமர் மற்றும் அழகம்மாள் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
மருமகளின் தலையை தனியாக துண்டித்த மாமியார்.. நந்தினி மீது எதுக்கு இவ்வளவு கோபம்.! பரபரப்பு தகவல்!