தங்கையின் வாழ்க்கையை சீரழித்த அண்ணன்கள்... சென்னையில் பயங்கரம்..!

Published : Aug 16, 2019, 05:11 PM ISTUpdated : Aug 16, 2019, 05:13 PM IST
தங்கையின் வாழ்க்கையை சீரழித்த அண்ணன்கள்... சென்னையில் பயங்கரம்..!

சுருக்கம்

சென்னையில் தங்கையின் கணவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணன்கள் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னையில் தங்கையின் கணவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணன்கள் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் வசித்து வந்தவர் ஜெயக்குமார். இவர் நேற்று இரவு, வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அவரது மைத்துனர்கள் விஜயதாஸ் மற்றும் மோகன்தாஸ் ஆகிய இருவரும் ஜெயக்குமாரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். 

அப்போதும், இருவரும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயக்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில், பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனையடுத்து, இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜெயக்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். தங்கையின் கணவரை 2 அண்ணன்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!
ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?