
தனியார் நர்சிங் ஹோம் ஒன்றில் நர்ஸ் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பணியில் சேர்ந்த முதல் நாளே நர்ஸ் ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திர பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் நியூ ஜூவன் எனும் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் நர்ஸ் ஒருவர் கடந்த வெள்ளிக் கிழமை அன்று பணியில் சேர்ந்து இருக்கிறார். பணியில் சேர்ந்த அன்று இரவு மருத்துவமனையின் அறை ஒன்றில் நர்ஸ் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
மருத்துவமனையினுள் பெண் சடலம் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து, அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போயினர். இது குறித்து போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த நர்ஸ்-இன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்ய வழக்குப் பதிவு செய்து இருக்கின்றனர்.
விசாரணை:
"நியூ ஜீவன் மருத்துவமனையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. மரணம் குறித்து விசாரணை நடத்த ஏதுவாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி இருக்கிறோம். உயிரிழந்தவரின் குடும்பத்தார், நர்ஸ் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என குற்றம் சாட்டி இருக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் வழங்கிய தகவல்களின் பேரில் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது," என உன்னாவ் கூடுதல் எஸ்.பி. சஷி சேகர் சிங் தெரிவித்தார்.
வீடியோ:
அன்று தான் அந்த பெண் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்ததற்கு மறுநாளே பெண் சடலமாக மீட்கப்பட்டு இருக்கிறார். நர்ஸ் உடல் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தை பலர் புகைப்படங்கள் எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.