நிதாரி தொடர் கொலை வழக்கு: 16 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற இருவரும் விடுதலை!

By SG Balan  |  First Published Oct 17, 2023, 1:32 PM IST

16 பேர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருப்பதும் சிபிஐ விசாரணையில் அம்பலமானது. இதனை அடுத்து மொகிந்தர் மற்றும் அவரது உதவியாளர் சுரேந்தர் இருவர் மீதும் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


நொய்டாவின் நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவரும் போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் மொகிந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது உதவியாளர் சுரேந்தர் கோலி ஆகிய இருவரையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

பல இளம்பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் இருவருக்கும் ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்படிருந்த நிலையில், அவர்கள் விடுதலை ஆகியுள்ளனர்.

Latest Videos

undefined

உத்தரப் பிரதேச மாநிலம் நிதாரி பகுதியில் 2006ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி இளம்பெண் ஒருவர் காணாமல் போனார். அந்த காலக்கட்டத்தில் பல சிறுமிகளும் இளம்பெண்களும் காணாமல் போனார்கள். இது தொடர்பான விசாரணையின்போது, முதலில் காணாமல் போன பெண் தொழிலதிபர் மொகிந்தர் சிங் பாந்தர் வீட்டில் வேலை செய்துவந்தது தெரிந்தது.

நீதிமன்றம் சட்டம் இயற்ற முடியாது: தன்பாலின திருமண வழக்கு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கருத்து

அவரது வீட்டை சோதனையிட்டபோது வீட்டின் பின்புறம் சில மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று காணாமல்போன இளம்பெண்ணுடையது தான் என்று டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டது. 16 பேர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருப்பதும் சிபிஐ விசாரணையில் அம்பலமானது. இதனை அடுத்து மொகிந்தர் மற்றும் அவரது உதவியாளர் சுரேந்தர் இருவர் மீதும் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ட்விட்டருக்கு ரூ.3 கோடி அபராதம்! குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் கமுக்கமாக இருந்த எலான் மஸ்க்

இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த காசியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்ற 2017ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. நீதிபதி பி.கே.திவாரி அளித்த அந்தத் தீர்ப்பில், மொகிந்தர், சுரேந்தர் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவிட்டதாகக் கூறி, மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

16 இல் 13 கொலைகளில் சுரேந்தருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒன்றில் மட்டும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. மோகிந்தருக்கு இரண்டு கொலைகளில் மரண தண்டனையும் ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து மொகிந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழங்கில் இருவரையும் விடுதலை செய்வதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இவர்கள் இருவர் மீதான குற்றச்சாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றம் சட்டம் இயற்ற முடியாது: தன்பாலின திருமண வழக்கு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கருத்து

click me!