மொட்டை அடித்துக் கொண்டு கோர்ட்டில் ஆஜரான நிர்மலா தேவி !!

Published : Aug 06, 2019, 09:33 AM IST
மொட்டை அடித்துக் கொண்டு கோர்ட்டில் ஆஜரான நிர்மலா தேவி !!

சுருக்கம்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மரா தேவி மொட்டை அடித்துக் கொண்டு வந்திருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.  

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி தலைமுடியை வெட்டி கொண்டு நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டார்.


இதே போல் அருப்புக் கோட்டையில் உள்ள மசூதி ஒன்றுக்குள் நுழைந்து அழுது புலம்பினார். இதையடுத்து அவரை வழக்கறிஞர்கள் நெல்லையில் உள்ள  தனியார் காப்பகத்தில் அனுமதித்தனர். அவருக்கு கடந்த ஒரு வாரமாக மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி, வழக்கத்திற்கு மாறாக மொட்டை அடித்து வந்திருந்தார்.

உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பாரி, விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு வைத்தி வைத்தார்.

PREV
click me!

Recommended Stories

விசிக கொடியை நட்டுட்டோம்.. இந்த இடம் எங்களுக்குத்தான்.. சிறுத்தைகள் அட்டூழியம்..!
ஐசியூ-வில் இருந்த 29 வயது இளம்பெண் அலறி கூச்சல்.. 3 மாதத்திற்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்