எஸ்டிபிஐ தமிழக தலைவர் நெல்லை முபராக் வீட்டிற்குள் புகுந்த என்ஐஏ..! திடீர் சோதனைக்கு காரணம் என்ன.?

By Ajmal Khan  |  First Published Jul 23, 2023, 7:56 AM IST

கும்பகோணத்தில் ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை செய்து வருகின்றனர். 
 


தமிழகத்தில் என்ஐஏ சோதனை

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம், ஒரு அமைப்பினர் மதம் மாற்றம் செய்ததைத் தட்டிக் கேட்டதற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது.  இந்த வழக்கில் முதலில் முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, அசாருதீன், ரிஸ்வான், சர்புதீன் உள்ளிட்ட மொத்தம் 13  பேரைக் கைது செய்து தேசியப் புலனாய்வு அமைப்பினர் விசாரித்து வருகின்றனர். சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

Tap to resize

Latest Videos

நெல்லை முபாரக்கிடம் விசாரணை

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சி, தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 24க்கும் மேற்பட்ட இடங்களில்  என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

6 வயது சிறுவன் கொலை... 14 வயது சிறுமி கற்பழிப்பு...! குற்றவாளிக்கு மரண தண்டணையுடன் 92 ஆண்டு சிறை

click me!