கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் விருந்து அழைத்த புதுமாப்பிள்ளையை கொலை செய்த மாமனார்.. பகீர் காரணம்.!

By vinoth kumar  |  First Published Jun 18, 2022, 11:19 AM IST

திருமணம் முடிந்து 5 நாட்கள் ஆன நிலையில் மகள் மற்றும் மருமகனுக்கு மாமனார் ரவிச்சந்திரன் விருந்து வைத்துள்ளார். அப்போது முத்தரசன் மதுபோதையில் தனது மனைவி அரவிந்தியாவுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். 


திருமணமாகி 5 நாட்கள் கூட ஆகாத நிலையில் விருந்துக்கு வந்த தனது சொந்த மருமகனை மாமனார் வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சிங்களாந்தி மங்களநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தரசன் (27). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் அரவிந்தியா (27) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

திருமணம் முடிந்து 5 நாட்கள் ஆன நிலையில் மகள் மற்றும் மருமகனுக்கு மாமனார் ரவிச்சந்திரன் விருந்து வைத்துள்ளார். அப்போது முத்தரசன் மதுபோதையில் தனது மனைவி அரவிந்தியாவுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால், குடிபோதையில் இருந்த முத்தரசன் அதனைக் கேட்கும் நிலையில் இல்லை. இதன் காரணமாக மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.  

இதனால், ஆத்திரமடைந்த மாமனார் அரிவாளை எடுத்து மருமகளை வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மருமகன் முத்தரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!