வீட்ல வச்சு மசாஜ் செய்ய முடியாது.. சென்டருக்கு வர சொன்ன பெண்ணை வீடு புகுந்து கதறவிட்ட இளைஞர்கள்..!

Published : Jun 18, 2022, 08:59 AM IST
வீட்ல வச்சு மசாஜ் செய்ய முடியாது.. சென்டருக்கு வர சொன்ன பெண்ணை வீடு புகுந்து கதறவிட்ட இளைஞர்கள்..!

சுருக்கம்

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் வசிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி மினிமோல் (43). இவர் சூலூரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில், மினிமோல் வீட்டில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு மசாஜ் செய்து விடும்படி கூறியிருக்கின்றனர்.

மசாஜ் சென்டர் நடத்தி வரும் பெண் உரிமையாளரை இளைஞர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் வசிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி மினிமோல் (43). இவர் சூலூரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில், மினிமோல் வீட்டில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு மசாஜ் செய்து விடும்படி கூறியிருக்கின்றனர். 

அப்போது 30 வயது குறைவான ஆண்களுக்கு மசாஜ் செய்வது இல்லை. மசாஜை பொறுத்தவரையில் சென்டரில் மட்டுமே ததாங்கம் செய்து வருவதாகவும் தெதரிவித்துள்ளார். ஆனால், அந்த வாலிபர்கள் செல்ல மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மினிமோலின் தலை, கை ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளனர். 

 இதில் வலி தாங்கமுடியாமல் அலறி சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 2 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பததிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 2 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?