பயங்கர அதிர்ச்சி... இரவில் சென்னையில் இருந்து மதுரை வந்த லாரி..!! கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள்..!!

Published : Nov 18, 2019, 01:36 PM IST
பயங்கர அதிர்ச்சி... இரவில் சென்னையில் இருந்து மதுரை வந்த லாரி..!! கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள்..!!

சுருக்கம்

இந்த நிலையை நள்ளிரவு லாரியில் இருந்த லோடை இறக்கி வைத்துவிட்டு ஓட்டுநர் அயர்ந்து உறங்கி உள்ளார்,காலை லாரியில் ஏறி பார்த்த போது மர்மமான பார்சல் ஒன்று கிடந்துள்ளது,அதனை திறந்து பார்த்தபோது கட்டு கட்டாக கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது, அதனைத் தொடர்ந்து திலகர் திடலில் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பார்சலை பிரித்து ஆய்வு செய்த போது சுமார் ஏழு லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.  

மதுரை ரயில் நிலைய வாசலில் கட்டுகட்டாக 7.5 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மதுரை ரயில் நிலையத்தில் செயல்படும் உணவுகளுக்கு தண்ணீர் கேன் இறக்குவதற்காக சென்னையிலிருந்து  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த  பூபதி என்பவருக்கு சொந்தமான லாரி வந்துள்ளது, 

இந்த நிலையை நள்ளிரவு லாரியில் இருந்த லோடை இறக்கி வைத்துவிட்டு ஓட்டுநர் அயர்ந்து உறங்கி உள்ளார்,காலை லாரியில் ஏறி பார்த்த போது மர்மமான பார்சல் ஒன்று கிடந்துள்ளது,அதனை திறந்து பார்த்தபோது கட்டு கட்டாக கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது, அதனைத் தொடர்ந்து திலகர் திடலில் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பார்சலை பிரித்து ஆய்வு செய்த போது சுமார் ஏழு லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. 

 அதனைத்தொடர்ந்து கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொண்டு பணத்தை வீசி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்,மதுரை ரயில் நிலைய வாசலில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!