மதுரையில் அதிகாலை நடந்த பயங்கரம்...!! ஆடு அறுப்பதுபோல் தம்பியின் கழுத்தை அறுத்துத் தள்ளிய அண்ணன்..!!

Published : Nov 18, 2019, 01:14 PM IST
மதுரையில்  அதிகாலை  நடந்த பயங்கரம்...!! ஆடு அறுப்பதுபோல் தம்பியின் கழுத்தை அறுத்துத் தள்ளிய அண்ணன்..!!

சுருக்கம்

இந்த நிலையில் நேற்று சிறுமி நந்தினிஸ்ரி வீட்டினுள் சிறுநீர் கழித்துவிட அதனை கண்டித்த தம்பி சம்பத் மிகவும் அசிங்கமாக அண்ணன் பாண்டி மற்றும் தாயரையும் திட்டி உள்ளார்.  இதனைத்தொடர்ந்து மனமுடைந்த பாண்டி இரவு முழுவதும் மது அருந்தி ஆத்திரத்தில்  இருந்து வந்தார்.   

ஒரு மாதத்திற்கு பிறகு மதுரையில் கொலைச்சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது அதில் , தாயையும்,  மகளையும் திட்டியதால் தம்பியின் கழுத்தையறுத்து அண்ணன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் உள்ள விளாச்சேரி வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் (லேட்) இவருடைய இளைய மகன் சம்பத்(33) ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

 

இவருடைய அண்ணன் பாண்டி (36) இவருக்கு திருமணமாகி நந்தினிஸ்ரி(8) என்ற குழந்தை உள்ளது. இவர் மனைவியை பிரிந்து குழந்தையுடன்  தனது வீட்டில் அம்மா மற்றும் தம்பி சம்பத் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சிறுமி நந்தினிஸ்ரி வீட்டினுள் சிறுநீர் கழித்துவிட அதனை கண்டித்த தம்பி சம்பத் மிகவும் அசிங்கமாக அண்ணன் பாண்டி மற்றும் தாயரையும் திட்டி உள்ளார். இதனைத்தொடர்ந்து மனமுடைந்த பாண்டி இரவு முழுவதும் மது அருந்தி ஆத்திரத்தில்  இருந்து வந்தார். 

இந்நிலையில் 17ம் தேதி அதிகாலை தம்பி சம்பத் தூங்கிக் கொண்டுருந்த போது,  கழுத்து மற்றும் நெற்றியில் அரிவாளால் சரமாரியாக  வெட்டினார் இதில்  சம்பவ அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.  இதனைத்தொடர்ந்து பாண்டி திருநகர் காவல் நிலையத்தில் அண்ணன் பாண்டி சரணடைந்தார். திருநகர்  போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிந்து பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி