நெல்லை அருகே தண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை !! தாய் வெறிச்செயல் !!

Published : Oct 09, 2019, 08:22 AM IST
நெல்லை அருகே தண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை  !!  தாய் வெறிச்செயல் !!

சுருக்கம்

களக்காடு அருகே 2 குழந்தைகளை மனநிலை சரியில்லாத தாய் தண்ணீரில் மூழகடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு தோப்பு தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன்). இவரது மனைவி சங்கரி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2½ வயதில் வர்ஷினி என்ற மகளும், 3 மாதமே ஆன முத்து அசித் என்ற ஆண் குழந்தையும் இருந்தது.

நம்பிராஜன் சென்னையில் தங்கியிருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.  அவரது மனைவி சங்கரி தனது 2 குழந்தைகளுடன் களக்காட்டில் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று  சங்கரி தனது வீட்டில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த ஒரு பாத்திரத்தில் தனது 2 குழந்தைகளையும் ஒருவர் பின் ஒருவராக போட்டு மூழ்கடித்தார்.

இதனால் 2 குழந்தைகளும் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தன. நம்பிராஜன் வீட்டில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது 2 குழந்தைகளும் பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து களக்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு தாய் சங்கரியை கைது செய்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து  2 குழந்தைகளையும் கொன்றது ஏன்? என்று தாய் சங்கரியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் சங்கரி எதுவும் கூறாமல் மவுனமாக இருந்துள்ளார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சங்கரி கடந்த சில மாதங்களாக மனநிலை பாதித்து இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் 2 குழந்தைகளையும் கொன்றி ருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்த போதிலும் 2 குழந்தைகளையும் சங்கரி கொலை செய்ததற்கு வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்