11 வயது சிறுமியை வேட்டையாடத் துடித்த 60 வயது திமுக பிரமுகர்... தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

Published : Oct 08, 2019, 06:02 PM IST
11 வயது சிறுமியை  வேட்டையாடத் துடித்த 60 வயது திமுக பிரமுகர்... தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சுருக்கம்

சென்னை வியாசர்பாடியில், 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அன்னை சத்தியா நகர் 3 வது தெருவை சேர்ந்த 60 வயதான பாண்டியன், திமுகவில் அப்பகுதி முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். மேலும், அன்னை சத்தியா நகர் பகுதியில் குளிர்பானம் மற்றும் ஐஸ்கீரிம் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு,  அந்த பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமி ஐஸ்கிரீம் வாங்க வந்துள்ளார். அப்பொழுது பாண்டியன் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அலறி கூச்சலிட்டதால் ஓடி வந்த பொதுமக்கள்,  சிறுமியை மீட்டதுடன்,  பாண்டியனை சராமாரியாக தாக்கி, கடையையும் அடித்து நொறுக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எம்கேபி நகர் போலிசார் பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

சார், எமர்ஜென்சி... கடிதம் எழுதி வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட முன்னாள் போலீஸ் ஐஜி..! பகீர் பின்னணி..!
அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!