உறவுக்கார ஆணுடன் படுக்கை அறையில் பெண் செய்த பயங்கரம்..!! கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து சதி..!!

Published : Oct 16, 2019, 11:39 AM IST
உறவுக்கார ஆணுடன் படுக்கை அறையில் பெண் செய்த பயங்கரம்..!! கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து சதி..!!

சுருக்கம்

அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சுரேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்து தம்மை அடித்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து அவருக்கு தோசையில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பின்னர் தமது உறவினர் முரசொலிமாறன் என்பவருடன் சேர்ந்து கணவர் சுரேஷை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அனுப்பிரியா வாக்குமூலம் அளித்துள்ளார்.

தன்னை அடித்து துன்புறுத்தி வந்த கணவனுக்கு தோசைமாவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பின் மனைவியே கழுத்து நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் சென்னை அடுத்த புழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே கணவனை கொன்று நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். புத்தகரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். இவருக்கு அனுப்ரியா என்ற மனைவியும் லோகேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சுரேஷ் வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வந்த புகாரையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சுரேஷ் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது. இதனையடுத்து சுரேஷின் மனைவி அனுப்ரியாவை விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். 

அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சுரேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்து தம்மை அடித்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து அவருக்கு தோசையில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பின்னர் தமது உறவினர் முரசொலிமாறன் என்பவருடன் சேர்ந்து கணவர் சுரேஷை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அனுப்பிரியா வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கணவனை கொன்று விட்டு மர்மமான முறையில் கணவர் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!