தந்தையால் தாலி கட்டி பலாத்காரம் செய்யப்பட்ட காதலி... ஊரறிய திருமண செய்து கொண்ட காதலன்..!

Published : Feb 01, 2020, 10:43 AM IST
தந்தையால் தாலி கட்டி பலாத்காரம் செய்யப்பட்ட காதலி... ஊரறிய திருமண செய்து கொண்ட காதலன்..!

சுருக்கம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்புநித்தியானந்தம் (38). அமமுக நிர்வாகியான இவர், ரெடிமேடு ஜவுளி விற்பனை கடை வைத்துள்ளார். இவரது மகன் முகேஷ்கண்ணன் (20). இவர் கல்லூரியில் படிக்கும்போது, தன்னுடன் படித்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. தற்போது 2 பேரும் சென்னையில் பணியாற்றி வருகின்றனர். 

நாகை அருகே திருமண செய்து வைக்கிறேன் என வரவழைத்து தந்தையால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட காதலியை ஊர்பொதுமக்கள் முன்னிலையில் மகன் திருமணம் செய்து கொண்டார். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்புநித்தியானந்தம் (38). அமமுக நிர்வாகியான இவர், ரெடிமேடு ஜவுளி விற்பனை கடை வைத்துள்ளார். இவரது மகன் முகேஷ்கண்ணன் (20). இவர் கல்லூரியில் படிக்கும்போது, தன்னுடன் படித்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. தற்போது 2 பேரும் சென்னையில் பணியாற்றி வருகின்றனர். 

இந்த காதல் விவகாரம் நித்தியானந்தத்துக்கு தெரியவந்தது. அவர், இளம்பெண்ணிடம் செல்போனில் பேசி, உன்னை எனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன். அதுபற்றி உன்னிடம் பேச வேண்டும். எனது வீட்டுக்கு தனியாக வா என்று அழைத்தார். இதையடுத்து 3 நாட்களுக்கு முன் அவரும் சென்னையில் இருந்து தனியாக கிளம்பி நித்தியானந்தம் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்ட நித்தியானந்தம், வீட்டில் இருந்த தாலியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் பலவந்தமாக கட்டிவிட்டார். இதைசற்றும் எதிர்பார்க்காத அவரை மிரட்டி, 2 நாள் வீட்டிலேயே அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார். 

பின்னர் தனது நண்பர் அவுரிக்காட்டை சேர்ந்த சக்திவேல் வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று விட்டு விட்டார். இதனிடையே இந்த விவகாரம் முகேஷ்கண்ணனுக்கு தெரியவந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, அவுரிக்காடு சென்று தனது காதலியை மீட்ட பின்னர், அவர் கழுத்தில் தந்தை கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று புகார் அளித்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் நித்தியானந்தம், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் சக்திவேல் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அந்த பெண்ணை முகே‌‌ஷ்கண்ணன் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், தந்தையால் அந்த பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அவரை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. ஆனாலும் அவர், தனது காதலியை கைவிடவில்லை. அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணை முகே‌‌ஷ்கண்ணன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பெண்ணின் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் ஊர்மக்கள் முன்னிலையில் நடந்தது. புதுமண தம்பதிக்கு ஊர் மக்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த திருமணம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!