
இந்நிலையில், நேற்று இரவு காற்றுக்காக வீட்டு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நள்ளிரவு அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பார்த்திபன் தலை முகம் என ஐந்து இடங்களில் கத்தியால் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் பார்த்திபனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வானமாமலை சம்பவ இடத்திற்கு வந்து வெட்டுப்பட்ட விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், எதற்காக பார்த்திபனை வெட்டினார்கள்? யார் வெட்டியது என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டுக்கு வெளியே உறங்கியபோது மாணவனின் முகத்தை சிதைத்த மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.