
இவர் மகன் செந்தில்வேல் மற்றும் பேரனுடன் மாரியப்பன் வீதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை செந்தில் வேல் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மூதாட்டி வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, செந்தில்வேலுக்கு தகவல் கொடுத்தனர்.
வீட்டுக்கு வந்து செந்தில்வேல் பார்த்த போது தாயின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு கழுத்த்தில் இருந்த 15 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பின்னர், போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த மேற்கு காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது சிசிடிவி கேமரா காட்சிகள் 17 வயது சிறுமி ஒருவர் வீட்டுக்குள் சென்று ஒரு மணி நேரமாக திரும்பி வராதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த சிறுமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தான் காதலித்த இளைஞரை திருமணம் செய்வதற்காக பணம் தேவைப்பட்டது, அதற்காக மூதாட்டியை கொலை செய்து நகையை திருடிச் சென்றதாக சிறுமி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சிறுமி மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமி திருடிய 15 சவரன் நகை அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. காதல் திருமணம் செய்ய பணம் இல்லாததால் 17 வயது சிறுமி மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து 15 சவரன் நகை திருடிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.