சாப்பாட்டில் உப்பு அதிகமா போச்சு..அதுக்கு இப்படியா பண்றது ? மனைவியை வெட்டி கொன்ற கணவன் !

Published : Apr 17, 2022, 08:59 AM IST
சாப்பாட்டில் உப்பு அதிகமா போச்சு..அதுக்கு இப்படியா பண்றது ? மனைவியை வெட்டி கொன்ற கணவன் !

சுருக்கம்

உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் நிலீஷ் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியை நிலீஷ் சரமாரியாக தாக்கியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பஹண்ட்ரா கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் நிலீஷ் ஷஹ்(46), நிர்மலா தம்பதி. நேற்று முன்தினம் காலை கணவன் நிலீஷுக்கு நிர்மலா சோறு மற்றும் காய்கறி கூட்டு அடங்கிய உணவை பரிமாறியுள்ளார். நிலீஷ் உணவை சாப்பிடும்போது அதில் உப்பு சற்று அதிகமாக இருந்துள்ளது. உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் நிலீஷ் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியை நிலீஷ் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்த ஒரு துணியை எடுத்து மனைவியின் கழுத்தை நிலீஷ் நெரித்துள்ளார். nஇதனால், மூச்சுவிடமுடியாமல் நிர்மலா துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு நிலீஷ் தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிர்மலாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நிலீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். சோற்றில் உணவு சற்று அதிகமாக இருந்ததால் மனைவியை துணியால் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!