35 சிறுமிகள் துன்புறுத்தி பாலியல் பலாத்காரம்... முன்னாள் எம்.எல்.ஏ. உட்பட 19 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Jan 20, 2020, 6:12 PM IST
Highlights

பீகார் மாநிலம் முசாபர்பூரில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் அரசு நிதி உதவியுடன் சிறுமியர் காப்பகம் நடத்தி வந்தார். காப்பகத்தில் உள்ள சிறுமியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காப்பகத்தில் இருந்த 35 சிறுமிகளை பலாத்காரம் செய்யப்பட்டது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாட்டையை உலுக்கியது. இதுதொடர்பா மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பிரஜேஸ்குமார் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

பீகார் விடுதியில் 35 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 19 பேரும் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், முன்னாள் எம்.எல்.ஏ. பிரஜேஸ் குமார் முக்கிய குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பீகார் மாநிலம் முசாபர்பூரில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் அரசு நிதி உதவியுடன் சிறுமியர் காப்பகம் நடத்தி வந்தார். காப்பகத்தில் உள்ள சிறுமியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காப்பகத்தில் இருந்த 35 சிறுமிகளை பலாத்காரம் செய்யப்பட்டது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாட்டையை உலுக்கியது. இதுதொடர்பா மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பிரஜேஸ்குமார் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

ஆனால், பீகார் போலீசார் விசாரிப்பதில் மனநிறைவு இல்லை எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், விசாரணையை பீகார் நீதிமன்றத்தில் இருந்து டெல்லியில் சாஹேத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேர் மீதும் டெல்லி போக்ஸோ நீதிமன்றத்தில் பலாத்காரம், குற்றச்சதி, குழந்தைகளைக் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையில், 20 பேரில் ஒருவரை வழக்கில் இருந்து விடுவித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 8 பெண்கள் உட்பட 19 பேர் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. பிரிஜேஷ் தாக்கூரை முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை குறித்த விவரங்கள் ஜனவரி 28-ம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!