மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கு.. 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த முக்கிய ரவுடி சுற்றிவளைப்பு..!

Published : Mar 29, 2022, 01:30 PM IST
மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கு.. 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த முக்கிய ரவுடி சுற்றிவளைப்பு..!

சுருக்கம்

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பிரபல ரவுடி சிவக்குமார் இவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில், ஜாமீனில் இருந்து வந்த சிவக்குமார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கு மாம்பலம் அருகே மர்ம கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு ரவுடி அழகு ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல ரவுடி கொலை

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பிரபல ரவுடி சிவக்குமார் இவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில், ஜாமீனில் இருந்து வந்த சிவக்குமார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கு மாம்பலம் அருகே மர்ம கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2001-ம் ஆண்டு தோட்டம் சேகரின் கொலைக்கு பழி தீர்கவே இந்த கொலை நடைபெற்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிசிடிவி பதிவுகள்

இதனையடுத்து, அப்பகுதியில் பொறுத்தியிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது தோட்டம் சேகரின் மகன் ரவுடி அழகு ராஜா என்பது கண்டறியப்பட்டது. இவர் கூலிப்படையினரின் உதவியோடு இந்த கொலையைச் செய்து முடித்தது விசாரணையில் தெரியவந்தது. சிவக்குமார் கொலை வழக்கில் கள்ளக்குறிச்சியில் சரணடைந்த அழகு ராஜா சிறையிலிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகிவிட்டார்.

ரவுடி அழகு ராஜா கைது

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த ரவுடி அழகு ராஜா கடலூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் அழகு ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?