உனக்கு ஜாதி விட்டு ஜாதி பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் மகள், மருமகனை ஆணவக் கொலை செய்த தந்தை.!

By vinoth kumar  |  First Published Oct 19, 2023, 3:36 PM IST

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கரண் ரமேஷ் (22). இவர் மும்பையைச் சேர்ந்த குல்னாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது.


மதம் மாறி காதல் திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை வீட்டிற்கு அழைத்து பெண்ணின் தந்தை ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கரண் ரமேஷ் (22). இவர் மும்பையைச் சேர்ந்த குல்னாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்படி இருந்த போதிலும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கரணை குல்னாஸ் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர்கள் இருவரும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு குடி பெயர்ந்தனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், தனது மகள் வேறு மதத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டதால் தந்தை கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இருவரையும் கொலை செய்ய குடும்பத்தினர் திட்டமிட்டனர். அதன்படி நைசாக பேசி மகள் குல்னாஸ் மற்றும் மருமகனை வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். அப்போது பெண்ணின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். 

பின்னர் இருவரின் உடலை வெவ்வேறு இடத்தில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இறுதியில் தனது மகள் மற்றும் மருமகனை பெண்ணின் தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. பெற்ற மகளையும், மருமகனையும் ஆணவக் கொலை செய்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

click me!